கேமரன்மலை, Gunung Jasar ரில் மலையேறும் நடவடிக்கையின் போது காணாமல் போன இந்தியப் பிரஜையின் உடல், அடர்ந்த காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் கேமரன்மலை மருத்துவமனைக்கு இன்று மதியம் கொண்டு வரப்பட்டது.
கடந்த எட்டு நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த 44 வயது நந்தன் சுரேஷ் நட்கர்னி நட்கர்னி என்பவரின் உடல் நேற்று மாலை 3.30 மணியளவில் போஸ் எட்டெப் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப்ப்டடது.
பள்ளத்தாக்கின் அருவின் அருகில் மீட்புப்டையினரால் கண்டு பிடிக்கப்படட அந்த இந்தியப் பிரஜையின் உடலை உடனடியாக மீட்க இயலாத நிலையில் இன்று காலை 11.20 மணியளவில் ஈப்போ ஆகாயப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் யேர்லிஃப்டெட் முறையின் வாயிலாக மீட்கப்பட்டது. பின்னர் சவப்பிரசோதனைக்கு அந்நபரின் உடல் கேமரன்மலை, சுல்தானா ஹஜ்ஜா கல்சோம் மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி தனியொரு நபராக கூனோங் ஜாசாரில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த இந்தியப் பிரஜை வழிதவறியிருக்கலாம் என்ற நம்பப்படுவதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.








