Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டை இழந்த இல்லத்தரசி

Share:

முகநூல் வழியாக அறிமுகமான நபரின் ஆசை வார்த்தைகளை நம்பி, ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கிய 51 வயது இல்லத்தரசி ஒருவர், ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.

அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 14 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 13 தவணைகளாக அவர் பணத்தை அனுப்பியுள்ளார். ஒரு ரிங்கிட் கூட லாபம் கிடைக்காத நிலையில், மீண்டும் பணம் கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மாரான் மாவட்ட போலீசில் புகார் அளித்தார்.

இந்த மோசடி குறித்துக் குற்றவியல் சட்டம் 420-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகப் போலீஸ் தலைவர் வோங் கிம் வாய் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வரும் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News