Oct 18, 2026
Thisaigal NewsYouTube

டோல் சாவடி பாதுகாவலருடன் கைகலப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டோல் சாவடி பாதுகாவலருடன் கைகலப்பு

ஜொகூர் , அக்டோபர் 02-

டோல் கேட் திறக்கப்படாததால் ஆந்திரம் அடைந்த ஆடவர் ஒருவர், டோல் சாவடி பாதுகாவலரை தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் ஜோகூர்பாரு, பெர்லிங் டோல் சாவடியில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் 10 வினாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட ஆடவரும், பாதுகாவலரும் சண்டையிட்டுக்கொண்டதும், அந்த சண்டையை பொதுமக்கள் விலக்கி, சமாதானப்படுத்துவதும் பதிவாகியுள்ளது.

இது குறித்து நேற்று முன்திம் காலையில் தமது தரப்பு புகார் பெற்றுள்ளதாக ஜோகூர் பாரு உதாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இரு தினங்களுக்கு முன்பு பிற்பகல் 1.25 மணியளவில் பெர்லிங் டோல் சாவடியில் இஸ்கந்தர் புத்தேரி நோக்கிச் செல்லும் வழித்தடத்தில் நிகழ்ந்துள்ளது. அதில் 37 வயதுடைய உள்நாட்டு ஆடவர் வாகனத்தில் பயணம் செய்த போது தமது அடையாள அட்டையை வாயிலாக Touch n Go சாவடியில் பணத்தை செலுத்த முற்பட்டுட்டுள்ளார். ஆனால், அதிலிருந்து பணம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து, அங்கிருந்த பாதுகாவலருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதுவே கைகலப்பாக மாறியது. ஆனாலும் அங்கிருந்த பொதுமக்கள் அவ்விருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →