நாளை செப்டம்பர் 23 ஆம் சனிக்கிழமை ஜோகூர், உலு திராம் வட்டாரத்தில் உள்ள தாமான் பெலாங்கி இண்டா பொது மண்டபத்தில் கர்னிவல் கெசிஹாத்தான் பங்சா ஜோகூர் 2023 சுகாதார முகாம் நடைபெற உள்ளது.
காலை 8.00 மணி அளவில் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பரிசோதனை, மனநல பரிசோதனை, முழங்கால் அல்த்ரா சவூன் பரிசோதனை, கண், காது. மூக்கு, தொண்டை பரிசோதனை ஆகிய அங்கங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும், இரத்த தானம், சூம்பா பயிற்சி, சுகாதார விளக்கவுரைகள், தகவல் முகப்புகள், சுகாதாரக் கண்காட்சிகள் போன்ற நடவடிக்கைகள், மாலை 5.00 மணி வரை பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
பெருபாத்தான் மடானி இலவச மருத்துவ சிகிச்சை, பெக்கா பி 40 போன்ற அரசாங்கத்தின் மக்கள் நலன் திட்டங்கள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் விளக்கம் கொடுக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியினை பிகேஆர் கட்சியின் தெப்ராவ் கிளை, போலிகிளினிக் திராம், ஜெய்வா சமூக நல அமைப்பு ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்கின்றனர்.
ஜொகூர் மக்களுக்காக நடத்தப்படும் இந்த ஜொகூர் சுகாதார முகாமில் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு தங்கள் உடல் நலத்தை இலவசமாகச் சோதித்துக் கொள்ள ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


