செமினி, செப்டம்பர்.05-
ஒரு வீட்டின் கூரையின் மீது நின்று கொண்டு, கீழே இறங்காமல் கத்தியை ஏந்தியவாறு மிரட்டிக் கொண்டு இருந்த நபர் ஒருவர், நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று சிலாங்கூர், செமினியில் நிகழ்ந்தது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.
இரவு 8.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். போலீசார் அவ்விடத்திற்கு விரைந்த போது, அந்த நபர் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த நிலையில் காணப்பட்டார்.
கூரையிலிருந்து கீழே இறங்கும்படி அந்த நபரிடம் போலீசார் சுமார் 4 மணி நேரம் பேச்சுக் கொடுத்த பின்னர் இறுதியில் கைது செய்யப்பட்டார். அவர் மன நலப் பாதிப்புடையவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தற்போது அவர் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக ஏசிபி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.








