Jul 31, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் சோதனை
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் சோதனை

Share:

நாட்டில் முறையான பயணப் பத்திர ஆவணமின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள அந்நிய நாட்டைச் சேர்ந்த குடியேறிகளுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை, விரைவில் நாடு தழுவிய நிலையில் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.

சட்டவிரோதக் குடியேறிகள் அதிகளவில் தங்கியுள்ள சில முதன்மை இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

ஆவணமற்ற குடியேறிகளின் பிரச்னை, கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் அல்ல, ஜோகூர், கெடா, மற்றும் கிளந்தான் போன்ற மாநிலங்களிலும் இருப்பதாக அயோப் கான் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் நாடு தழுவிய நிலையில் வெகு விரைவில் போலீசார், மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை முடுக்கி விடவிருக்கின்றனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அயோப் கான் இதனை தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகரில் மினி டாக்கா எனப்படும் ஜாலான் சிலாங் - கில் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி போலீசார் தொடங்கிய மிகப்பெரிய சோதனை நடவடிக்கையில் 1,101 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தவிர கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 4 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அயோப் கான் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை