திவெட் எனப்படும் தொழில்நுட்ப பயிற்சி கல்வியை முடித்த மாணவர்கள் மாதத்திற்கு 4 ஆயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக சம்பளம் பெறுவதை உயர்க்கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோ செரி கலிட் நோர்டின் உறுதி அளித்துள்ளார்.
தமது அமைச்சின் கீழ் உள்ள போலிடெக்னிக் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் வாயிலாக மாணவர்கள் கூடுதல் சம்பளம் பெறுதற்கான சூழல் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் திவெட் தொழில்துறைக்கு தேவையான ஆள்பலத்தை உருவாக்குவதற்கு புதிய பாடத்திட்டத்தின் வாயிலாக அத்துறையை சார்ந்தவர்களுடன் அமைச்சு நல்லுறவை வளர்த்து வருவதாக கலிட் நோர்டின் குறிப்பிட்டார்.








