May 22, 2026
Thisaigal NewsYouTube
தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் ஏமாற்றம்
தற்போதைய செய்திகள்

தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் ஏமாற்றம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 11-

2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவை மே 27 ஆம் தேதிக்கு முன்னதாக அறிவிக்கும்படி தாங்கள் செய்து கொண்ட முறையீட்டிற்கு கல்வி அமைச்சு செவிசாய்க்காதது குறி​த்து தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP ஏமாற்றம் தெரிவித்துள்ளது.

மே 27 ஆம் தேதி SPM தேர்வு முடிவு வெளியிடப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது என்று கல்வி அ​மைச்சர் ஃபத்லினா சிடெக் திட்டவட்டமாக அறிவித்து இருப்பது தொடர்பில் NUTP தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான​ இரண்டாவது பள்ளி தவணை விடுமுறை வரும் மே 24 ஆம் தேதி தொட​ங்கி ஜூன் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் விடுமுறையில் இருக்கும் காலகட்டத்தில் SPM தேர்வு முடிவு அறிவிக்கப்படுவது, அவர்களை மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.

எனவே அந்த தேதிக்கு முன்னதாகவே குறிப்பாக மே 23 ஆம் தேதி SPM தேர்வு முடிவை அறிவிக்கக் கோரி, கல்வி அமைச்சிடம் NUTP மேல்முறையீடு செய்து இருந்தது.

Related News