கோலாலம்பூர், ஜூலை.15-
மலேசியாவிற்கு வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தருவித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு வங்காளதேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வங்காளதேசப் பிரஜைகளில் ஒருவர், தங்கள் சொந்த நாட்டில் சுற்றுலா பயண நிறுவனத்தின் இயக்குநர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.
அந்த இரண்டு நபர்களையும் வரும் ஜுலை 20 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.








