Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கே.எல்.ஐ.ஏ.வில் மின்சாரத் தடை ஏற்றுக் கொள்ள முடியாது
தற்போதைய செய்திகள்

கே.எல்.ஐ.ஏ.வில் மின்சாரத் தடை ஏற்றுக் கொள்ள முடியாது

Share:

சிப்பாங், ஆகஸ்ட்.28-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் இன்று காலையில் ஏற்பட்ட மின்சாரத் தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இது போன்ற கோளாறுகள் நாட்டின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்து விடும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று காலையில் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் நிகழ்வு ஒன்றைத் தொடக்கி வைப்பதற்குத் தாம் சென்ற போது மின்சாரத் தடை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்துத் துறையில் 15 நிமிடத்திற்கு மேல் மின்சார தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் அது மிகப் பெரிய இடையூறு என்று கருதப்படும். ஆனால், நாட்டின் முக்கிய நுழைவாயிலான விமான நிலையத்தில் ஏற்பட்டதை என்னவென்று சொல்ல முடியும் என்று அந்தோணி லோாக் வினவினார்.

பிற்பகல் 2.10 மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வு, மின்சாரக் கோளாறினால் 2.35 க்குத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News