Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள் பாதுகாப்பாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள் பாதுகாப்பாக மீட்பு

Share:

கோலசிலாங்கூர்,ஜூலை 20-

கோலசிலாங்கூர், Jeram பகுதியில் ஆடவரினால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு சிறுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அந்த சிறுமிகள் கடத்தப்பட்டதாக நேற்று மாலை 6.30 மணிக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையில் சுமார் ஒரு மணித்தில் இந்த இரண்டு சிறுமிகளும் எவ்வித காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Amban Nordin தெரிவித்தார்.

நேற்று மாலையில் தங்கள் வீடமைப்புப்பகுதியில் அந்த இரண்டு சிறுமிகள் விளையாடிக்கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபரால் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரின் தேடுதலின் போது அந்த சிறுமிகள் அந்த வீடமைப்புப்பகுதியின் அருகில் கண்டு பிடிக்கப்பட்டனர். சிறுமிகளை கடத்தியதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பெற்றோர்களின் கண்காணிப்பின்றி சிறார்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று Amban Nordin வட்டார மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு