May 22, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் உட்கொண்ட நபரினால் ஒப்பந்தத் தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட நபரினால் ஒப்பந்தத் தொழிலாளி மரணம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 28 -

கோலாலம்பூர், ஜாலன் கெப்போங் கில் போதைப்பொருள் உட்கொண்ட நபர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதப்பட்டதில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் காயமுற்றனர்.

இந்த சாலை விபத்து நேற்று காலை 7 மணியளவில் நிகழ்ந்திருப்பதாக கோலாலம்பூர், போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் காவல்துறை தலைவர் ஏ.சி.பி சரிபுடின் மொஹாமாட் சாலே தெரிவித்தார்.

புலாத்தான் கெப்போங் கிலிருந்து கெப்போங் கிற்கு 19 வயதுடைய இளைஞன் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா கார் விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்ததாக சரிபுடின் மொஹாமாட் கூறினார்.

அந்நபர் ஓட்டிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று வெளிநாட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது மோதியதாக நம்பப்படுவதாக சரிபுடின் மொஹாமாட் விவரித்தார்.

இவ்விபத்தில் 23 வயதுடைய அந்நிய பிரஜை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 31, 38 வயதிற்கு உட்பட்ட இருவரும் சிகிச்சைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News