கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தொடுத்துள்ள அவதூறு வழக்கை எதிர்நோக்கியுள்ள வலைப்பதிவாளர் பாபாகோமோ என்ற வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 30 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்த குற்றத்திற்காக அந்த வலைப்பதிவாளருக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதித்துறை ஆணையர் கான் தேசியோங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
முன்னாள் ஐஜிபி தொடுத்துள்ள அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் வழக்கின் தன்மை குறித்து பகிரங்கமாக விமர்சித்தது மூலம் அவர் நீதிமன்ற உத்தரவை மீறியிருப்பது உறுதியாகியிருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.








