கோலாலம்பூர், செப்டம்பர்.08-
மாஜூ ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் இயக்குநர் டான் ஶ்ரீ அபு சாஹிட் முகமட்டின் மனைவி புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா முகமட் அஸ்மி, தன் மீதான 67.1 மில்லியன் ரிங்கிட் பண மோசடி வழக்கை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினார்.
48 வயதான புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா, சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட அத்தொகையை, தனது கணவரின் வங்கிக் கணக்கில் இருந்து பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் நவம்பர் 27-ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில், புவான் ஶ்ரீ நோர் அஸ்ரினா இக்குற்றத்தைப் புரிந்தார் என அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








