பினாங்கு மாநில சுற்றுச்சூழல் துறையை ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு சோமுவிடம் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில அரசின் முடிவு, விவேகமான நடவடிக்கை அல்ல. அந்த துறை வேறு நபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மலேசிய மண்ணின் தோழர் கழகத்தின் தலைவர் மீனாட்சி ராமன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு, சுற்றுச்சூழல் துறையை தன் வசம் கொண்டு இருப்பது தவறில்லை. ஆனால், அவரிடமே வீடமைப்புத்துறையும் ஒப்படைக்கப்பட்டு இருப்பதுதான் பெரும் தவறாகும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலருமான மீனாட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.
வீடமைப்புத்துறையும், சுற்றச்சூழல் துறையும் எக்காரணத்தைக் கொண்டும் ஒருவரிடமே ஒப்படைக்கப்படக்கூடாது. மலேசிய அமைச்சரவை முறையிலும் இவ்விரு துறைகளும் ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டதாக வரலாறு கிடையாது. வீடமைப்புத்திட்டத்திற்கு பொறுப்பான ஒருவரிடம் எவ்வாறு சுற்றுச்சூழல் துறை ஒப்படைக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பிறை சட்டமன்ற உறுப்பினர் சுந்தராஜுவிடமே இவ்விரு துறைகளும் ஒப்பைடக்கப்பட்டிருப்பது அதில் சுய நலன் சார்ந்த முரண்பாடுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதையும் மீனாட்சி ராமன் சுட்டிக்காட்டினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


