கோலாம்பூர், அக்டோபர்.10-
ஃபிரிடம் ஃபுளொடில்லா கப்பலைச் சேர்ந்த 145 மனித நேய ஆர்வலர்கள், இஸ்ரேலின் Ketziot சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை இஸ்ரேலியப் படைகள் உடல் ரீதியாகத் துன்புறுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
என்றாலும், அதிலிருந்த 9 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை மைகேர் தலைமை செயலதிகாரி கமாருல் ஸாமான் ஷாஹாருல் அன்வார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, அவர்கள் 9 பேரையும் சிறையில் இருந்து விடுப்பதற்கான முயற்சியில் வழக்கறிஞர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்கள் 9 பேருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் கமாருல் ஸாமான் தெரிவித்துள்ளார்.








