Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சுற்றுலா பேருந்து ஓட்டுனர்களுக்கு சம்பளம் வெறும் 1,700 ரிங்கிட்தானா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுற்றுலா பேருந்து ஓட்டுனர்களுக்கு சம்பளம் வெறும் 1,700 ரிங்கிட்தானா?

கோலாலம்பூர், ஜூன்.23-

சுற்றுலா பேருந்து ஓட்டுநர்கள் நிலையான அலவன்ஸ் தொகை எதுவும் இல்லாமல் மாதத்திற்கு 1,700 ரிங்கிட் அடிப்படை சம்பளத்தை மட்டுமே பெறுவதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை மனிதவள அமைச்சான கெசுமா கடுமையாகக் கருதுவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஊதிய ஆணை 2024 கீழ், அடிப்படை சம்பள அமைப்பு அல்லது மொத்த மாத வருமானம் எதுவாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச மாத சம்பளமான 1,700 ரிங்கிட் சம்பளத்தை ஊழியர்கள் பெறுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதை கெசுமா தெளிவுபடுத்த விரும்புகிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

சேவை ஒப்பந்தத்தின் கீழ் அடிப்படைச் சம்பளத்தை முதலாளிகள் நிர்ணயித்தால், பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை சம்பள விகிதம், தற்போதைய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை விட குறைவாக இருக்கக்கூடாது என்பதை அமைச்சர் விளக்கினார்.

சேவை ஒப்பந்தத்தில் முதலாளி அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை என்றால், செலுத்த வேண்டிய மாதாந்திர சம்பள விகிதம் தற்போதைய குறைந்தபட்ச சம்பள விகிதத்தை விடக் குறைவாக இல்லை என்பதையும், பிற அலவன்ஸ் தொகைகள் செலுத்துவதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →