Oct 9, 2026
Thisaigal NewsYouTube

நீலாயில் கைகலப்பு: ஆடவருக்கு வெட்டுக் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நீலாயில் கைகலப்பு:  ஆடவருக்கு வெட்டுக் காயம்

நீலாய், ஜூன்.22-

நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் இன்று அதிகாலை 1 மணியளவில் ஒரு கும்பலிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டும், வெட்டப்பட்டும் படுகாயமடைந்தார். செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், முகத்திலும் உடலிலும் இரத்தக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மோதல் ஓர் உணவகத்தின் முன் நடந்ததாகவும், மது அருந்தியதால் ஏற்பட்டத் தகராறு என்றும் நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →