Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபரின் மலேசிய வருகையை எதிர்த்து ஆட்சேப பேரணி
தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபரின் மலேசிய வருகையை எதிர்த்து ஆட்சேப பேரணி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

வரும் அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் வருகையை எதிர்த்து மிகப் பெரிய ஆட்சேப பேரணியை நடத்தப் போவதாக 23 அரசு சாரா அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

டிரம்பின் வருகையை எதிர்த்து நாளை செப்டம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை இந்த ஆட்சேப பேரணி நடைபெறும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் இனப் படுகொலைக்கு அமெரிக்காவின் பங்களிப்பு தொடர்பில் டிரம்பின் மலேசிய வருகையை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அந்த அரசு சாரா இயக்கங்கள் அறிவித்துள்ளன.

Related News