Oct 15, 2026
Thisaigal NewsYouTube

இரத்தத்தில் போதைமருந்து கலந்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சுபாங்ஜெயா, ஜன. 18-


புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதல் நாள், சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் நடந்த பின்க்பிஸ் புத்தாண்டு வரவேற்பு நிகழ்வின் போது, நால்வர் உயிரிழந்ததற்கு போதைமருந்தே மூலக் காரணமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நால்வரின் இரத்தத்திலும் நச்சுத்தன்மையிலான போதைப்பொருள் கலந்திருப்பதை ரசாயன இலாகாவின் நச்சுயில் பகுப்பாய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

ரசாயன இலாகா வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு முழு அறிக்கையை பெறுவதற்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நால்வர் மரணம் தொடர்பில் நிகழ்ச்சி படைப்பாளர் உட்பட 52 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையும் ஏசிபி வான் அஸ்லான் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →