Mar 15, 2026
Thisaigal NewsYouTube
விபச்சார கும்பல்கள் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

விபச்சார கும்பல்கள் முறியடிப்பு

Share:

அந்நிய நாட்டுப் பெண்களை மோகப் பொருளைப் போல் பயன்படுத்தி, அவர்களை தலா 200 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரைக்கும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கு கடந்த ஓராண்டு காலமாக சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, ஒழுங்கீன நடவடிக்கையை மேற்கொண்டு வந்த விபச்சார கும்பலை மலேசிய குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளது.

நேற்று இரவு ஈப்போவில் ஐந்து முக்கிய இடங்களை இலக்காக கொண்டு குடிநுழைவுத்துறையின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 141 அந்நிய நாட்டுப் பெண்களும், 10 உள்ளுர் பெண்களும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை துணை தலைமை இயக்குநர் Jafri Embok Taha தெரிவித்தர்.
இந்த சோதனைகள் யாவும் கேளிக்கை மையங்கள் மற்றும் இன்னிசை மையங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு நடத்தப்பட்டதாகும் என்று அவர் விளக்கினார்.
18 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் பெண்கள் சீனா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்