பினாங்கு துணை முதல்வர் டாக்டர்.பி. ராமசாமிக்கு எதிராக, மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தொடுத்திருந்த அவதூறு வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தைப்பூச விழாவின் போது, கோவிட் 19 நோய் பரவல் தடுப்பு எஸ்.ஒ.பி நடைமுறைகள் தொடர்பாக, மலேசிய இந்து சங்கத் தலைவர் என்ற முறையில், தம்மை அவமதித்ததாக டாக்டர் ராமசாமிக்கு எதிராக மோகன் ஷான் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.
எனினும், இவ்வழக்கு தொடர்பாக மறு மதிப்பீடு செய்த பின்னர், டாக்டர் ராமசாமிக்கு எதிராக இவ்வழக்கைத் தொடர நோக்கம் கொண்டிருக்க வில்லை என்று மோகன் ஷான் முடிவுச் செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கோலாலம்பூர், உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இவ்வழக்கை மோகன் ஷான் மீடுக்கொண்டிருப்பதை, டாக்டர் ராமசாமியின் முதன்மை வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


