ஷா ஆலாம், ஆகஸ்ட்.21-
நிறுவனம் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 8 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அரசாங்க அமலாக்க அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
40 வயது மதிக்கத்தக்க அந்த அரசாங்க அதிகாரி, நேற்று புதன்கிழமை 2 மணியளவில் சிலாங்கூர் மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த அதிகாரியை வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றது.








