கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்யாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் அதிகாரத்துவப் பயணத்தின் போது ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சந்திப்பு நடத்தப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கிரேம்லின் செய்தி நிறுவனம் கூறுகிறது.
1967 ஆண்டு முதல் ரஷ்யாவுடன் தூதர உறவைப் பேணி வரும் மலேசியாவின் மாமன்னர் ஒருவர், அந்நாட்டிற்கு வருகை புரிவது இதுவே முதல் முறையாகும் என்று ரஷ்ய பத்திரிகைகள் கூறுகின்றன.
அதிபர் விளாடிமிர் புடினுக்கும் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும் இடையிலான இந்தச் சந்திப்பு வரலாறு பொதிந்ததாகும்.
இச்சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் ரஷ்ய- மலேசிய இரு வழி உறவு மற்றும் வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து முக்கியப் பேச்சு வார்த்தை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிரேம்லின் தகவல்கள் கூறுகின்றன.








