அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பிறகு, ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சராக தமது பெயர் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரவணன் விளக்கமளித்துள்ளார்.
இவ்விவகாரம் சார்ந்த முடிவு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிமின் அதிகாரத்திற்கு உட்பட்டது. யாரும் அவரை வற்புறுத்தவோ அல்லது நெருக்கடி கொடுக்கவோ முடியாது என சரவணன் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக பிரதமருக்கு ம.இ.கா. தொடர்ந்து ஆதரவு வழங்கும் என இன்று ஈப்போவில் நடைபெற்ற பேரா மாநில ம.இ.கா.வின் 77வது பேராளர் மாநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.








