கோலாலம்பூர், செப்டம்பர்.17-
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 600 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறி, வாட்சாப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் தவறானது என பிரதமர் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அந்த உதவித் தொகையானது, மாதம் 1,198 ரிங்கிட் வருமானம் மட்டுமே கொண்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்காக வழங்கப்படுகின்றது என்பதையும் பிரதமர் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதே வேளையில், பிள்ளைகள், உறவினர்கள் இன்றி தனித்து வாழும் முதியவர்களும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
என்றாலும், வறுமைக் கோட்டிற்கு மேல் மாதம் வருமானம் கொண்ட முதியவர்கள், இந்த உதவியைத் தொகையை பெற நினைத்தால் சிறப்பு பரிசீலனையின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








