Dec 3, 2025
Thisaigal NewsYouTube
திரும்பவும் பத்த வெச்சுட்டாங்களே.. லட்சத்தீவில் ஹிஜாப் தடை! பொது சீருடை சட்டத்தால் முஸ்லிம்கள் ஷாக்
தற்போதைய செய்திகள்

திரும்பவும் பத்த வெச்சுட்டாங்களே.. லட்சத்தீவில் ஹிஜாப் தடை! பொது சீருடை சட்டத்தால் முஸ்லிம்கள் ஷாக்

Share:

கர்நாடகாவில் ஹிஜாப் தடை பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியதைபோல், லட்சத்தீவிலும் ஹிஜாபுக்கு தடை விதிக்கும் வகையில் அதன் யூனியன் பிரதேச நிர்வாகம் புதிய சீருடைய விதிகளை அமல்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவை அடுத்த அரபிக் கடலில் அமைந்து இருக்கும் அழகிய பகுதி லட்சத்தீவு. யூனியன் பிரதேசங்களில் ஒன்றான இங்கு 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மலையாளம் பேரும் முஸ்லிம்கள். நாட்டிலேயே மிகவும் அமைதியான பகுதியாக அறியப்படும் இங்கு கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் ரீதியான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு காரணம் அங்குள்ள நிர்வாகம்தான். லட்சத்தீவை பொறுத்தவரை அங்கு புதுச்சேரிபோல் தனி முதலமைச்சரோ, துணை நிலை ஆளுநரோ கிடையாது. டாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையு போன்று இங்கும் அட்மினிஸ்ட்ரேடர் (நிர்வாகி) என்ற பொறுப்புதான் உயர் பொறுப்பாக இருக்கும். ஆளுநரை போல் இது ஒரு நியமன பொறுப்பு.

இந்த மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பிரபுல் கோடா பட்டேல். தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு லட்சத்தீவுக்கான நிர்வாகியாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிரச்சனை தலைதூக்கத் தொடங்கியது.

அங்குள்ள மக்களின் பிரதான உணவாக கருதப்படும் மாட்டிறைச்சிக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் பட்டேலுக்கு எதிராக அம்மாநில மக்கள் போர்க்கொடி தூக்கினர். பல்வேறு போராட்டங்கள் அம்மாநிலத்தில் வெடித்தன.

Related News