மலாக்கா, ஜனவரி.02-
மலேசிய கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று பந்தாய் கிளேபாங் கடற்கரைக்கு அருகே விபத்திற்குள்ளான சம்பவத்தில், காயமடைந்த இரு வீரர்களும், லூமூட்டிலுள்ள 96 இராணுவப் படை மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளனர்.
இடுப்பு மற்றும் கணுக்காலில் கடுமையான காயங்களுக்கு உள்ளான முஹமட் ஸுல்ஃபிகா மொஹிடி என்ற டிஎம்எஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிக்கும், Lieutenant Commander Afiq Muzani Abdul Aziz-க்கும், பந்தாய் கிளேபாங் மருத்துவமனையில் தற்காலிக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக, மாநில சுகாதாரம், மனித வளம் மற்றும் ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Ngwe Hee Sem தெரிவித்துள்ளார்.
நுரையீரல் கோளாறு காரணமாக Afiq Muzani, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருவதாகவும் Ngwe குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் விரைவில் லூமூட் 96 இராணுவப் படை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்படவுள்ளனர்.
மலேசிய இராணுவத்தைச் சேர்ந்த, சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின், 60-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த புதன்கிழமை, நடத்தப்பட்ட செயல்விளக்கப் பயிற்சியின் போது, Super Lynx helicopter என்ற ஹெலிகாப்டர் பந்தாய் கிளேபாங் கடற்கரை அருகே அவசரமாகத் தரையிறங்கியது.
இதில் அதில் பயணம் செய்த 4 அதிகாரிகளில் இருவர் காயமடைந்தனர். இந்நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.








