Nov 26, 2026
Thisaigal NewsYouTube

மனித மூலதன மேம்பாட்டில் 25-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘எச்ஆர்டி விருதுகள் 2026’ கோலாகலமாக நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனித மூலதன மேம்பாட்டில் 25-வது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் ‘எச்ஆர்டி விருதுகள் 2026’ கோலாகலமாக நடைபெற்றது

மனிதவள அமைச்சான கெசுமா ஆதரவுடன் மனிதவள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கார்ப் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான ‘எச்ஆர்டி விருதளிப்பு விழா, நேற்றிரவு கோலாலம்பூர், பங்சார் சௌத், கனேக்‌ஷென் கான்ஃபரன்ஸ் & எவெண்ட் செண்டர் மாநாட்டு மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

மனித மூலதன மேம்பாட்டில் சிறந்து விளங்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலாளிகள், புதுமையான பயிற்சி வழங்குநர்கள் மற்றும் சிறந்த பயிற்றுநர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

மலேசியாவின் எதிர்காலத் தொழிலாளர் சக்தியை உருவாக்கும் சாதனையாளர்களைப் பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த மதிப்புமிக்க விழாவை, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.

2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, திறன் மேம்பாடு, பணியிடக் கற்றலை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்ச்சியான திறன் வளர்ச்சிக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அங்கீகரிக்கும் தளமாக இந்த எச்ஆர்டி விருதுகள் திகழ்கிறது.

தனது 25-வது பதிப்பைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு விருதுகளில் அர்த்தமுள்ள சாதனைகள், கற்றலில் செய்யப்படும் வியூக முதலீடுகள் மற்றும் அளவிடக்கூடிய பயிற்சி முடிவுகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இது திறமையான, சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளக்கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தொழிலாளர் சக்தியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.

இவ்விழாவில் மனிதவள அமைச்சர் விருதான பிளாட்டினம், எச்ஆர்டி கார்ப் விருதான தங்கம், எச்ஆர்டி கார்ப் விருதான வெள்ளி, எச்ஆர்டி கார்ப்பின் மற்றொரு விருதான வெண்கலம் என நான்கு பிரிவுகளின் கீழ் மொத்தம் 53 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், தொழிலாளர் மேம்பாடு மற்றும் பயிற்சியில் மிகச் சிறந்த சாதனைகளைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமாக ‘மனிதவள அமைச்சர் விருது’ திகழ்கிறது.

இந்த விருதளிப்பு விழாவை தொடக்கி வைத்து, தலைமையுரையாற்றிய மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், வேகமாக மாறிவரும் உலகத் தொழில்துறைச் சூழலுக்கு ஏற்ப மலேசியத் தொழிலாளர்களின் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதும், மறுபயிற்சி அளிப்பதும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது என்றார்.

தொழிலாளர்கள் தங்களது பணித்திறனை உயர்த்திக்கொண்டு, போட்டித்தன்மையுடன் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ற தரமான பயிற்சிகளை வழங்குவதில் மனிதவள அமைச்சும் எச்ஆர்டி கார்ப் நிறுவனமும் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் திவேட் பயிற்சிகளுக்காக அரசாங்கம் 8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ள நிலையில், எச்ஆர்டி கார்ப் தனது லெவி நிதியிலிருந்து 3 பில்லியன் ரிங்கிட்டைப் பயன்படுத்தி 30 லட்சம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளையில், 100 மில்லியன் ரிங்கிட் நிதியுடன் பேஸ் (PACE) திட்டத்தின் கீழ் 10 முக்கிய வியூக சார் பயிற்சித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டத்தோ ஸ்ரீ ரமணன், இத்தகைய முயற்சிகள் மலேசியர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகள், உயர்ந்த வருமானம் மற்றும் பரந்த தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குவதுடன், எதிர்காலத்திற்குத் தயாரான திறன்மிக்க தொழிலாளர் சக்தியை உருவாக்கவும் வழிவகுக்கும் என்றார்.

மேலும் எச்ஆர்டி கார்ப்பை சிறப்பாக வழிநடத்தி, நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அஸிஸ், அதன் தலைவர் டத்தோ ருஸ்லி ஜாஃபார் மற்றும் எச்ஆர்டி கார்ப் பணிக்குழுவை வெகுவாக டத்தோ ஸ்ரீ ரமணன் பாராட்டிய வேளையில் இந்த விருதளிப்பு விழாவில் விருதுகளை பெற்றவர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இராணுவ விமானத்தின் மூலம் 156 மில்லியன் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் கடத்தல்: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தகவல்

இராணுவ விமானத்தின் மூலம் 156 மில்லியன் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் கடத்தல்: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தகவல்

விமானிகளின் மனநலத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான திட்டம் - போக்குவரத்து அமைச்சு தகவல்

விமானிகளின் மனநலத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான திட்டம் - போக்குவரத்து அமைச்சு தகவல்

இந்தோனேசிய காட்டுத்தீக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமா? - ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தகவல்

இந்தோனேசிய காட்டுத்தீக்கு மலேசிய நிறுவனங்கள் காரணமா? - ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தகவல்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோனி தாமசுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் நஜிப்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோனி தாமசுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றார் நஜிப்

தரமற்ற இறக்குமதிப் பொருட்களுக்கு விரைவில் கடும் கட்டுபாடு - அமைச்சர் ஜொஹாரி தகவல்

தரமற்ற இறக்குமதிப் பொருட்களுக்கு விரைவில் கடும் கட்டுபாடு - அமைச்சர் ஜொஹாரி தகவல்

போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை

போலீசாரின் பணிச் சுமை அதிகரிப்பு: ஒரு அதிகாரி 1000 வழக்குகளைக் கையாளும் நிலை