நாட்டில் புகலிடம் தேடி, அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ள வெளிநாட்டவர்களை திறன் குறைந்த வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.தற்போது அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள கோட்டாவின் கீழ் வேலை காலியிடங்களுக்கு அகதிகள் அந்தஸ்தில் உள்ளவர்களை கொண்டு நிரப்புவதற்கு ஆராயப்பட்டு வருவதாக சபா, சரவா, சிறப்புப்பணிகளுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்தார்.
தற்போதைய வேலை வாய்ப்பு கொள்கைகள், தொழிலாளர் சட்டங்கள் ஆகியவற்றின் விதிகளை நிறைவு செய்யக்கூடிய முதலாளிகள் அகதிகளை வேலையாட்களாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அர்மிசான் முஹமாட் அலி மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட அகதிகளின் உண்மையான நிலவரங்களை பெறுவதற்கு கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. அகதிகள் தூதரகத்தின் ஒத்துழைப்பை தாங்கள் நாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.








