Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மைடினில் விலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிலைநிறுத்தப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மைடினில் விலைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிலைநிறுத்தப்படும்

ஷா ஆலாம், ஜூன்.30-

நாளை ஜுலை முதல் தேதி எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி நடப்புக்கு வரும் நிலையில் நாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடர்பு வர்த்தகத் தளமான மைடின், வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் தற்போதையை விலையிலேயே பொருட்களை விற்பனை செய்யும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.

தங்கள் வர்த்தகத் தளங்களில் புதிய பொருட்கள் மாற்றப்படும் வரையில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் பழைய விலையிலேயே கிடைக்கும். புதிய விலை நிர்ணயிக்கப்படாது என்று டாக்டர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்திற்குத் தாங்க வல்லப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்த்தப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →