கோலாலம்பூர், சௌகிட், பசார் ராஜா போட், ஈரச்சந்தையில் நிகழ்ந்த அமளி துமளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில் அடையாளம் காணப்பட்ட சில நபர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் எ.எஸ்.பி நூர் டெல்ஹான் தெரிவித்தார். அந்த சந்தையில் வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக சில தனி நபர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் இந்தச் சலசலப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
தனிநபர்கள் சட்டங்களை, கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆலோசனை கூறிய அவர், இது தொடர்பாக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


