Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையை அமைச்சு விரைவில் தீருக்கும் ! – அமைச்சர் சுல்கெஃப்லி அகமது வாக்குறுதி

ஜன.3-

சுகாதார துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறையும் சமநிலையற்ற விநியோகப் பிரச்சினைகளையும் இந்த ஆண்டில் தீர்க்க சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr Dzulkefly தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து அமைச்சுகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், நோய்களை தீவிரமாகவும் விரிவாகவும் கையாள்வதிலும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தும். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

நாட்டின் சுகாதார நிதியை மாற்றுவதற்கும், அதிக மருத்துவப் பணவீக்கத்தை கையாள்வதற்கும், DRG, CRG ஆகிய நோய் கண்டறிதல் தொடர்பான குழுக்கள் போன்ற புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான தேசிய சுகாதாரக் கட்டணப் பொறிமுறை குழு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாக Dr Dzulkefly குறிப்பிட்டார்.

தனியார் சுகாதார காப்பீட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு ஊக்குவிப்பதோடு, காப்பீடு இல்லாத T20 பிரிவினருக்கு காப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்த முடியும் என Dr Dzulkefly நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்