Apr 4, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

Share:

போதைப்பொருள் அல்லது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவிப்பவர்களுக்கு எதிராக வழங்கப்படும் குற்றச்சாட்டுகளில் சீரான தன்மை இருக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர், சட்டத்துறை தலைவரை வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் கிள்ளானில் ஒரு நபரைக் கொன்ற விபத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது 'கொலைக் குற்றம்' சுமத்தப்பட்டதை ராயர் வரவேற்றார். இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் பேராக், பத்து காஜாவில் இதேபோல் போதைப்பொருள் பயன்படுத்திய ஓட்டுநரால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், மென்மையான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படுவதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.

"கிள்ளான் விபத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், பத்து காஜா விபத்தில் மட்டும் ஏன் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 உட்பிரிவு 1 -ன் கீழ் சாதாரண விசாரணை நடத்தப்படுகிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு கோட்பாடு நிலைநாட்டப்பட வேண்டும்," என ராயர் சுட்டிக்காட்டினார்.

சட்டம் 41 உட்பிரிவு ஒன்றின் கீழ் 10 ஆண்டுகள் வரை மட்டுமே சிறைத்தண்டனை வழங்க முடியும். ஆனால், போதைப்பொருள் தாக்கத்தில் விபத்து ஏற்படுத்தியதற்கான பிரிவு 44(1)-ன் கீழ் 15 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இந்த முரண்பாடுகள் குறித்து சட்டத்துறை தலைவர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராயர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஏப்ரல் 2 ஆம் தேதி திசைகளில் வந்த செய்திகளின்படி பத்து காஜா விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட Hilux ஓட்டுநர் முகமது கையிருள் ஹஸ்மான் அல்ல என்பதையும் திசைகள் நிர்வாகம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்