Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் இன்னிசை கேளிக்கை மையத்தின் வெளியே ஆயுமேந்திய சண்டை: 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் இன்னிசை கேளிக்கை மையத்தின் வெளியே ஆயுமேந்திய சண்டை: 6 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-

கோலாலம்பூரில் உள்ள ஓர் இன்னிசை கேளிக்கை மையத்தின் வெளியே நேற்று முன்தினம் நடந்த ஆயுதமேந்திய சண்டையில் ஈடுட்டதாக நம்பப்படும் 6 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயமுற்றுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை காலை 9.33 மணிக்கு 29 வயது நபர் ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கேளிக்கை மையத்திலிருந்து புகார்தாரர் வெளியேறிய போது அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகவும், அவரது முதுகில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

போலீசாருக்குக் கிடைத்த தகவலின் பேரில், 25 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூ மாஷாரிமான் தெரிவித்தார்.

ஆபத்தான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பில் இவ்விவகாரம் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News