Jul 24, 2026
Thisaigal NewsYouTube
இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

Share:

மலேசிய இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தரமான கல்வி, முழுமையான நலத்திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூகத் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இதனை வலியுறுத்தியதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்கத் துறைகளும் அடிமட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் உண்மையான தேவைகளை கண்டறிந்து, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் உண்மையில் தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், கருணை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையாலேயே நாட்டின் வளர்ச்சியில் எந்த சமூகமும் பின்தங்காமல் இருப்பதையும், அனைத்து மலேசியர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சமமான வாய்ப்புகள் கிடைப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?

போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்