கோத்தா கினபாலு, செப்டம்பர்.22-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், இன்று திங்கட்கிழமை, முதல் மைனர் சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில், மரண விசாரணை நீதிமன்றத்தில், அந்த மைனர் சாட்சி விசாரணை செய்யப்படும் போது, ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
குழந்தை சாட்சிச் சட்டம் 2007 இன் சான்றுகள் அடிப்படையில், கேமரா முன்னிலையில், சாட்சியம் பெறப்பட்டது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, இந்த மைனர் சாட்சியின் தனிப்பட்ட தகவல்களும், அடையாளங்களும் சமூக ஊடகங்களில் கசிந்ததையடுத்து, இன்று சாட்சியம் பெறப்பட்ட நேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.








