Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேராக் சுல்தானைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பேராக் சுல்தானைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, செப்டம்பர்.08-

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, ஈப்போவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், பேராக் சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷாவைக் கட்டியணைக்க முயன்ற பெண் மீது தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் முகமட் ஹாரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் நுர்ஹஸ்வானி அஃப்னி முகமட் ஸொர்கி என்ற 41 வயதான அப்பெண்மணிக்கு எதிராக பினல் கோர்ட் செக்‌ஷன் 352-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இக்குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அப்பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ, 1,000 ரிங்கிட் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News