2030ஆம் ஆண்டுக்குள் தென்கிழக்காசியாவின் முன்மாதிரி மாநிலமாக சிலாங்கூரை உருவாக்குவதே தமது இலக்கு என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
2026 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான இரண்டாவது சிலாங்கூர் திட்டமான RS-2 மூலம், பொருளாதார வளர்ச்சியுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கோம்பாக் உள்ளிட்ட மாவட்டங்கள் தங்களுக்கான பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்கி வளர வேண்டும் என்றும், மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்துடன் வசித்துக்கொண்டே பிற பகுதிகளில் வேலை செய்யக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
அதேவேளை, தொழில்துறை மற்றும் தரவு மையங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் அளவுக்கு நீர், மின்சார வசதிகள் இருப்பதை உறுதி செய்யாமல் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியுடன் மக்களின் வாழ்க்கைத் தரம், வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றையும் மேம்படுத்தி, சிலாங்கூரை மலேசியாவின் பொருளாதார மையமாக மட்டுமின்றி, பிராந்தியத்தின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதே RS-2-ன் நோக்கம் என்றும் அமருடின் கூறினார்.








