May 6, 2026
Thisaigal NewsYouTube
சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்ட 2 வயது சிறுமி மரணம்
தற்போதைய செய்திகள்

சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்ட 2 வயது சிறுமி மரணம்

Share:

தங்காக், டிசம்பர்.20-

இரண்டு வயது சிறுமி ஒருவர், சொந்த தந்தையின் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக மாண்டார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று முன் தினம் காலை 8.15 மணியளவில் ஜோகூர், தங்காக்கில் நிகழ்ந்தது.

உடலில் கடுமையான காயங்களுக்கு ஆளாகி சுயநினைவு இழந்த நிலையில் மூவார், சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி, சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சிறுமி தனது தந்தையின் காரின் பின்னால் நின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. காரின் பின்னால் தனது மகள் நிற்பதை உணராத தந்தை, காரை பின்னோக்கி எடுத்த போது அந்த வாகனத்தால் மோதப்பட்டு, அந்த சிறுமியின் உடலிலும், தலையிலும் கடும் காயங்கள் ஏற்பட்டதாக தங்காக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Jamellulkamal Abdul Halim தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்