நேற்று கெடா மாநில போலீசார் செயல்டுத்திய ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையின் போது, போலீசார் 20 லட்சம் மதிப்புள்ள போதைபொருட்களைக் கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 6 நாள் முதல் செயல்படுத்தப்பட்ட இந்த ஓப்ஸ் தாப்பிஸ் ஹாஸ் நடவடிக்கையில் இதுவரை 416 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய 2 லட்சம் போதை பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய 20 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களைக் கைப்பற்றி உள்ள போலீசார், 15.52 கிலோ கிராம் போதைப்பொருள் வைத்திருந்த இரு தய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆடவர்களையும் கைது செய்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.








