Jul 1, 2026
Thisaigal NewsYouTube
முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு
தற்போதைய செய்திகள்

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

Share:

மலேசிய இந்திய தொழில்முனைவோருக்காக 220 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'முத்ரா' நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அவர்களுக்கு, மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட அந்த சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், "இந்திய சமூகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை" என்று வர்ணித்தார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு 160 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த இந்த ஒதுக்கீடு, தற்போது 220 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது, இந்திய சமூகத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிவிடாமல் பாதுகாக்கும் அரசின் உறுதியை இது காட்டுகிறது என்றார் அவர்.

ஏற்கனவே மார்ச் 31-ஆம் தேதி வரை, 1,805 இந்திய தொழில்முனைவோர் 33.48 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியைப் பெற்று பயனடைந்துள்ளனர். தெக்குன் நேஷனல் , பேங்க் ரக்யாட், எஸ்.எம்.இ பேங்க் போன்ற ஏஜென்சிகளுடன் இணைந்து, இத்திட்டம் அடிமட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களைச் சென்றடைவதை சம்மேளனம் உறுதி செய்யும் என்றும், இந்திய வணிக சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக சம்ளேனம் செயல்படும் என்றும் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை