Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் / வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளத்திட்டம் / வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பளத் திட்டம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ராஜெய அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான 19 ஆவது அமானத் பெர்டானா நிகழ்வில் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை செய்யவிருக்கிறார்.

பிரதமரின் இந்த முக்கிய அறிவிப்பு, அரசாங்க ஊழியர்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இன்டான் எனப்படும் தேசிய பொது நிர்வாகக் கழகத்தின் துணை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹனிஃப் ஜைனல் அபிடின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், பொதுச் சேவை ஊழியர்களுக்கு அறிவிக்கவிருக்கும் இனிப்பான செய்தியாக இது விளங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை