கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மொத்தம் ஏழு உள்ஊராட்சி மன்றங்களுக்கு பேருந்து நிலையங்களும் இரயில் நிலையங்களுக்குச் செல்லும் நடைபாதை வழித்தடங்களையும் நிர்மாணிக்க அடையாளம் காணுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை அடுத்த ஆண்டு உடனடியாக மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவால் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பொதுப் போக்குவரத்து வசதி ஒருங்கிணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் வசதியையும் பாதுகாப்பையும் தமது அமைச்சு கவனத்தில் கொள்கிறது எனவும் குறிப்பாக மக்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் மகளிர் பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.








