Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மனைவிக்கு சொந்தமான காரை எரித்த நபர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜோகூர் பாரு, பிப்.5-

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜோகூர்பாரு, கொலம்பியா மருத்துவமனை அருகில் , ஜாலான் தெப்ராவ் சாலை சமிக்ஞை விளக்குப்பகுதியில் தனது மனைவிக்குச் சொந்தமான காரை தீயிட்டு கொளுத்தியதாக நம்பப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய அந்த நபர், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பத்து பஹாட், புகிட் பாசீர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு புகிட் பாசீர், பத்து பஹாட் மற்றும் ஜோகூர்பாரு, தாமான் ஶ்ரீ தெப்ராவில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அந்த நபர் பிடிபட்டதாக ரவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

சம்பவத்திற்கு பின்னர் அந்த நபர், தப்பிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட Toyota Vellfire வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்