Sep 22, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த மருத்துவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த மருத்துவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டது

Share:

திங்கட்கிழமை தொடங்கி நாளை புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுப்பட போவதாக மிரட்டல் விடுத்திருந்த, 'Mogok Doktor' இயக்கம், இன்று இரண்டாவது நாளிலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மூடியுள்ளது.

ஒப்பந்த மருத்துவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவது, வேலை நிறுத்தத்தை எப்போது தொடங்குவது, முடிப்பது, மற்றும் ஆகக் கடைசியான நிலவரங்கள் யாவை என்பதை ஒப்பந்த மருத்துவர்கள் உடனுக்குடன் தகவல்களை அறிந்துக்கொள்வதற்கும், பகிர்ந்துக்கொள்வதற்கும் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம், இன்று மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் மூடப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்த இயலவில்லை.

Related News