கோலாலம்பூரில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சுமார் ஐந்து மீட்டர் உயரமுள்ள மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த ராணுவ வீரர், லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை 8.04 மணியளவில், புக்கிட் ஜாலிலில் உள்ள வீட்டிலிருந்து சுங்கை பீசி ராணுவ முகாமுக்குப் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, டெர்மினல் பெர்செபாடு செலாத்தான் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. மேம்பாலத்தில் யு-டர்ன் எடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த அவர், கீழே சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது விழுந்தார். இதனால் இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது அவர்களைத் தவிர்க்க முயன்ற லாரி, 46 வயது ஆடவர் ஓட்டிச் சென்ற ஹோண்டா மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அந்த ஓட்டுநரின் இடது கை முறிந்ததுடன், முகத்திலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் முகமட் ஸம்ஸுரி முகமட் ஈசா தெரிவித்தார்.








