கோலாலம்பூர், அக்டோபர்.12-
மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, 15999 என்ற தாலியான் காசே அவசர உதவி எண்ணுக்கு கடந்த செப்டம்பர் வரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. பெறப்பட்ட அழைப்புகளில், உதவித் திட்டங்கள் குறித்த கேள்விகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன என அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி ஷுக்ரி அறிவித்துள்ளார். குறிப்பாக, பொதுநலன் சார்ந்த உதவிகளின் நிலை, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு உதவிகள் பற்றிய கேள்விகளே முதலிடத்தில் இருக்கின்றன. எனினும், முதியோர் பராமரிப்பு, புறக்கணிப்பு, குடும்ப வன்முறை தொடர்பான முக்கியமான அழைப்புகளும் பதிவாகியுள்ளன.








