கான்ஸ்டபிள்களுக்கான ஆரம்ப சம்பளத் திட்டத்தை ஆயிரத்து 441 வெள்ளியில் இருந்து குறைந்தபட்ச சம்பளமாக ஆயிரத்து 500 ஆக மாற்றியமைக்க வேண்டும் என்று காவல்துறை முன்மொழிந்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து தேசியக் காவல் துறை தலைவர் ரஸாருதீன் உசேன் தெரிவிக்கயில், தற்போது அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவினத்தைக் கருத்தில் கொண்டு காவல் துறையின் கடைநிலை பதவிக்கான ஊதியமாக இந்தப் பரிந்துரையைத் தாம் பொதுச் சேவைத் துறையிடம் முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் எல்லா காவல்துறை பதவிகளுக்கும் 30 விழுக்காடு சம்பள உயர்வு அல்லது ஒரே முறை வழங்கப்படும் சம்பள உயர்வு போன்றவற்றையும் தாம் பரிந்துரைக்க இருப்பதாகவும் அவர் சொன்னார்.








