புத்ராஜெயா, செப்டம்பர்.02-
தனது மனைவியின் உறவுக்காரப் பெண்ணான 15 வயது சிறுமியைப் பாலியல் பலவந்தம் செய்த குற்றத்திற்காக நில விற்பனை ஏஜெண்டு ஒருவருக்கு விதிக்கப்பட்ட 8 ஆண்டுச் சிறை மற்றும் இரண்டு பிரம்படித் தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
33 வயதுடைய நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறை மற்றும் பிரம்படித் தண்டனையை உறுதிச் செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத்க் தலைமையேற்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜோகூர் மாசாயில் பள்ளி முடிந்து மழைத் தூறலில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த 15 வயது மாணவியை வீட்டில் கொண்டுச் சென்று விடுவதாகக் கூறி, தனது காரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நில விற்பனை ஏஜெண்டு குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








